காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரைக்கு ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உள்படுத்தபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

நன்றி...
அததெரண